Posts

Showing posts from 2009

உன் வாசலில்

உன் வாசலில் என் இதயத்தைச் சிதற விட்டிருக்கிறேன். மிதித்துப் போ! அதில் பூக்கள் உதித்து வரும்!

கடிதம்...!!!

ஒரு முறைக்கு பல முறையாய் படித்துப்பார்க்க .... புத்தகங்களுக்குள் வைத்து கல்லூரிக்கு எடுத்துச்செல்ல .... வீடு மாற்றும் போதேல்லாம் பத்திரமாய் பாதுகாக்க ... செல்லரித்துப்போன இடங்களில் சொல் நிரப்பி காப்பாற்ற .... கையெழுத்தின் அழகில் சில நேரம் மயங்கிக்கிடக்க .... எழுத்துப்பிழையான இடங்களை சுட்டிக்காட்ட .... எழுதிய தேதியில் இருந்து இன்றைய தேதி வரை கணக்கிட .... படித்துக்கொண்டிருக்கும் வேளையில் யாராவது வந்துவிட்டால் பதற்றமடைந்து மறைத்து வைக்க ... ஒவ்வொரு எழுத்தின் இடைவெளியிலும் உன் முகம் பார்த்து ரசிக்க ..... இதுவரை என்னிடம் இல்லை ... நீ எழுதியதாய் ஒரு கடிதம் கூட .....! --தனபால்

தாடி!

ரோஜாத்தோட்டத்தின் நினைவாக.... நான் முள் வளர்க்கிறேன் முகத்தில் தாடி!

நானும் நீயும்

நீ காதலிக்கப்பட்டதால் நான் கவிஞன். நான் காயப்பட்டதால் நீ கவிதை

ஒ! அந்த முதியவள்!

நடந்து செல்கிறாள் அந்த முதியவள். அவள், காலங்களை பார்த்தவள். காயங்களை பார்த்தவள். முகத்திலே சுருக்கங்களே ஒரு கவிதையாய் இருக்கும்! எலும்புக் குவியலின் மேல் ஒரு தோல் கவிதை, அவள்! செருப்பில்லா அவள் கால்களை பார்த்து சூரியனே சற்று பரிதாபப் படும்! தினமும், தெருவோர உணவகத்தில் தண்ணீர் கிடைக்காமல், துரத்தி அடிக்க படுகிறாள்! பார்த்து உசுக்கொட்டுவோர்களை விட, பரிந்து உதவி செய்பவர்கள் மிகவும் குறைவு. நாய்களிடம் குப்பைதொட்டி உணவை பங்கிட்டு கொள்வதில் அவளுக்கு அலாதி பிரியம். கை ஏந்தி வந்த காசில், பாதி, கால் வயிறுக்கு - மீதி, காகிச் சட்டை காரருக்கு. கடவுளிடம் ஏக்கத்தையும், கொசுக்களிடம் தூகத்தையும், தொலைத்துவிட்டவள்! இவளின் வயோதிகம், பல விதமான வியாதிகளின் சரணாலயம்! இருந்தும் இவள் வாழ்கிறாள், தன்னை விட்டு, அயல் நாடு சென்ற மகனின் முகத்தை, ஒரு முறையாவது பார்ப்பதற்காக! ஒ! அந்த முதியவள்! Vignesh

அழுதுவிடாதே. . .

என்றாவது என்னை நீ சந்தித்தால் அழுதுவிடாதே! உன் பிரிவை சுமக்கின்ற என் மெல்லிய இதயம் உன் கண்ணீரின் கனம் தாங்காமல் உடைந்துவிடக்கூடும். . . babu

மரமான‌ மரம்!

Image

ஓடிச்சென்றேன்!

பச்சைப் பட்டில் இத்தனை பளிங்கு மணிகளை விதறியவன் யார்? ஆவலாய் ஓடிச்சென்றேன்! அடடா புல்நுனிகளில் மிளிரும் பனித்துளிகள்! கலாசுரன்

தோல்வி...

முதல் தோல்வி... கண்ணீரில் கரையும்... அடுத்தடுத்தத் தோல்விகள், தொண்டை குழியில் சிக்கும்... முற்றும் துறந்த பின், புன்னகையில் மறையும்... முயற்சி செய்ய செய்ய, தோல்வி உன்னிடம் தோல்வி அடையும்!!! தோற்றுப் பார், உன் வாழ்வில் ஏற்றம் வரும்! உற்றுப் பார், உன் தோல்வி வெற்றியாய் மாறும்... - Santy

காதல் கவிதை

கவிதை பார்! என் பிழைகளுக்குள் உன் அழகை

இதயம்

இறந்து போன இதயம் இன்னும் துடிக்கிறது.... அவளுக்குத் திருமண வாழ்த்துச்சொல்ல!.....

அவள்

அவள்- யரோ எழுதிய‌ என் கவிதை!

தானம்

இதயமில்லாதவளுக்குக் கொடுத்திருக்கிறேன் இதயத்தை!

எனக்குப் பிடித்த கவிதைகள்

Image