ஒ! அந்த முதியவள்!

நடந்து செல்கிறாள் அந்த முதியவள்.
அவள், காலங்களை பார்த்தவள்.
காயங்களை பார்த்தவள்.

முகத்திலே சுருக்கங்களே ஒரு
கவிதையாய் இருக்கும்!
எலும்புக் குவியலின் மேல்
ஒரு தோல் கவிதை, அவள்!

செருப்பில்லா அவள் கால்களை
பார்த்து சூரியனே சற்று
பரிதாபப் படும்!

தினமும், தெருவோர உணவகத்தில்
தண்ணீர் கிடைக்காமல்,
துரத்தி அடிக்க படுகிறாள்!

பார்த்து உசுக்கொட்டுவோர்களை விட,
பரிந்து உதவி செய்பவர்கள்
மிகவும் குறைவு.

நாய்களிடம் குப்பைதொட்டி உணவை
பங்கிட்டு கொள்வதில் அவளுக்கு
அலாதி பிரியம்.

கை ஏந்தி வந்த காசில், பாதி,
கால் வயிறுக்கு - மீதி,
காகிச் சட்டை காரருக்கு.

கடவுளிடம் ஏக்கத்தையும்,
கொசுக்களிடம் தூகத்தையும்,
தொலைத்துவிட்டவள்!

இவளின் வயோதிகம்,
பல விதமான வியாதிகளின்
சரணாலயம்!

இருந்தும் இவள் வாழ்கிறாள்,
தன்னை விட்டு, அயல் நாடு
சென்ற மகனின் முகத்தை,
ஒரு முறையாவது பார்ப்பதற்காக!

ஒ! அந்த முதியவள்!

Vignesh

Comments

Popular posts from this blog

உன் வாசலில்