Posts

கவிதை

காதலியே! கவிதை வேண்டுமா? எழுதிக்கொள் முதலில் உன் பெயரை எழுது! பிறகு என் பெயரை எழுது!

உன் வாசலில்

உன் வாசலில் என் இதயத்தைச் சிதற விட்டிருக்கிறேன். மிதித்துப் போ! அதில் பூக்கள் உதித்து வரும்!

கடிதம்...!!!

ஒரு முறைக்கு பல முறையாய் படித்துப்பார்க்க .... புத்தகங்களுக்குள் வைத்து கல்லூரிக்கு எடுத்துச்செல்ல .... வீடு மாற்றும் போதேல்லாம் பத்திரமாய் பாதுகாக்க ... செல்லரித்துப்போன இடங்களில் சொல் நிரப்பி காப்பாற்ற .... கையெழுத்தின் அழகில் சில நேரம் மயங்கிக்கிடக்க .... எழுத்துப்பிழையான இடங்களை சுட்டிக்காட்ட .... எழுதிய தேதியில் இருந்து இன்றைய தேதி வரை கணக்கிட .... படித்துக்கொண்டிருக்கும் வேளையில் யாராவது வந்துவிட்டால் பதற்றமடைந்து மறைத்து வைக்க ... ஒவ்வொரு எழுத்தின் இடைவெளியிலும் உன் முகம் பார்த்து ரசிக்க ..... இதுவரை என்னிடம் இல்லை ... நீ எழுதியதாய் ஒரு கடிதம் கூட .....! --தனபால்

தாடி!

ரோஜாத்தோட்டத்தின் நினைவாக.... நான் முள் வளர்க்கிறேன் முகத்தில் தாடி!

நானும் நீயும்

நீ காதலிக்கப்பட்டதால் நான் கவிஞன். நான் காயப்பட்டதால் நீ கவிதை

ஒ! அந்த முதியவள்!

நடந்து செல்கிறாள் அந்த முதியவள். அவள், காலங்களை பார்த்தவள். காயங்களை பார்த்தவள். முகத்திலே சுருக்கங்களே ஒரு கவிதையாய் இருக்கும்! எலும்புக் குவியலின் மேல் ஒரு தோல் கவிதை, அவள்! செருப்பில்லா அவள் கால்களை பார்த்து சூரியனே சற்று பரிதாபப் படும்! தினமும், தெருவோர உணவகத்தில் தண்ணீர் கிடைக்காமல், துரத்தி அடிக்க படுகிறாள்! பார்த்து உசுக்கொட்டுவோர்களை விட, பரிந்து உதவி செய்பவர்கள் மிகவும் குறைவு. நாய்களிடம் குப்பைதொட்டி உணவை பங்கிட்டு கொள்வதில் அவளுக்கு அலாதி பிரியம். கை ஏந்தி வந்த காசில், பாதி, கால் வயிறுக்கு - மீதி, காகிச் சட்டை காரருக்கு. கடவுளிடம் ஏக்கத்தையும், கொசுக்களிடம் தூகத்தையும், தொலைத்துவிட்டவள்! இவளின் வயோதிகம், பல விதமான வியாதிகளின் சரணாலயம்! இருந்தும் இவள் வாழ்கிறாள், தன்னை விட்டு, அயல் நாடு சென்ற மகனின் முகத்தை, ஒரு முறையாவது பார்ப்பதற்காக! ஒ! அந்த முதியவள்! Vignesh

அழுதுவிடாதே. . .

என்றாவது என்னை நீ சந்தித்தால் அழுதுவிடாதே! உன் பிரிவை சுமக்கின்ற என் மெல்லிய இதயம் உன் கண்ணீரின் கனம் தாங்காமல் உடைந்துவிடக்கூடும். . . babu